பௌத்தத்தை பாதுகாக்க நாட்டில் புதிய சட்டம் அவசியம்: கம்மன்பில ஆவேசம்

நாட்டில் பௌத்த மதத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுபவையாகும். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணம் பெறப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”பௌத்த மதத்தை அவமதிக்கும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பௌத்த மதத்தை அவமதிக்கும் பிக்குகள் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெறுகிறார்கள்.

சிலர் தங்களை பௌத்தர்கள் போல் காட்டிக்கொண்டு பௌத்தத்தை அவமதிக்கிறார்கள். இதற்கிடையில், மதம் சாராத குருமார்கள் கூட பௌத்த மதத்தை பயமின்றி அவமதிக்கிறார்கள்.

பௌத்தத்தை அவமதிக்கும் மதச்சார்பின்மைவாதிகளும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகின்றனர். எனவே, பௌத்தத்தை அவமதிக்கும் இந்தச் செயற்பாடு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடு என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இந்த நாட்டின் முதுகெலும்பை உடைக்க வேண்டுமானால் கிராமத்துக்கும் விகாரைகளுக்கும் உள்ள உறவை உடைக்க வேண்டும். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள்.

யார் வேண்டுமானாலும் காவியை அணிந்துகொண்டு சமூகத்தால் கேலி, கிண்டல் செய்யும் எதையும் செய்யலாம். அவர்களை கைது செய்ய முடியாது.

அனைவரும் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியலாம். 2300 வருடங்களாக இந்நாட்டில் காவி அணியும் மாண்பைக் காப்பாற்றும் வகையில், பிக்குகள் அணியும் காவியை ஏனையவர்கள் அணிவதை கட்டுப்படுத்தும் சட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கொண்டுவர வேண்டும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin