போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்குவதற்காக கணவன் சொன்ன விநோத புகாரால், மனம் வெறுத்துப்போன மனைவி எதிர் மனுதாரராக கூட ஆஜராகாமல் கணவனை கை கழுவியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுதீப். இவர் கடந்ட 2006ஆம் ஆண்டு மவுமிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஒரு சில மாதங்கள் மட்டும் ஒன்றாக இருந்த இவர்களுக்கு இடையே பிரச்சனை வெடித்திருக்கிறது. இதையடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்க திட்டமிட்ட சுதீப் போபால் குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். அங்கு அவர் எடுத்து வைத்த வாதங்கள் எடுபடாததால் விவாகரத்து வழக்கு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்தை நாடிய சுதீப், தாம்பத்ய உறவு கொள்ள தனது மனைவி மறுத்ததாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் செட்டில்மெண்டாக 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். தன்னை வைத்து வாழ அருகதையற்று விவாகரத்து கேட்டு ஓடிக்கொண்டிருக்கும் கணவன் சுதீபை கை கழுவ முடிவெடுத்த மனைவி மவுமிதா சுதீப் தொடர்ந்த விவாகரத்து வழக்கில் ஆஜராவதையே தவிர்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், கணவன் மனைவி பந்தத்தில் தாம்பத்ய உறவுக்கு மறுப்பது மனரீதியாக கொடுமையானது என்றும் மனுதாரரான சுதீப் முன்வைத்த குற்றச்சாட்டை மறுக்க சம்பந்தப்பட்ட பெண்ணான மவுமிதாவோ அல்லது அவர் தரப்பிலோ யாரும் ஆஜராகததால் விவாகரத்து வழங்குவதாக தீர்ப்பளித்தது. ஒருவேளை மவுமிதா ஆஜராகி கணவன் முன் வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கை நடத்தியிருந்தால் அவ்வளவு எளிதாக விவாகரத்து கிடைத்திருக்க வாய்ப்பில்லை