இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன

சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

2024-2025 ஆம் காலக்கட்டத்துக்கு அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, BASL இன் செயலாளராக சதுர கல்ஹேனவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவர்கள் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர்.

BASL இன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் நேற்று (10) சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேமுனி டி சில்வாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நவரத்ன இரண்டாவது முறையாக BASL இன் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், கல்ஹேனவும் செயலாளர் பதவிக்கான வேட்புமனுக்களை கையளித்திருந்தார்.

இந் நிலையில் வேறு வேட்பு மனுக்கள் இல்லாதமையினால் இவர்கள் இருவரும் போட்டியின்றி குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Recommended For You

About the Author: admin