ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள மருந்தகங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் நீதி நடவடிக்கையுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு நோய்களுக்காக சில மருந்துக்கடைகளால் வழங்கப்படும் போதை மாத்திரைகளை உபயோகிக்கப் பழகிவிட்டதால், மருந்துக் கடைகளில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க முயல்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனால், ஒவ்வொரு மருந்தகங்களிலும் பாதுகாப்பு கேமரா அமைப்பு பராமரிக்கவும், இரவில் ஒவ்வொரு மருந்தகமும் மூடப்படுவதால் இரவு ரோந்து பணியில் ஈடுபடும்பொலிஸ் அதிகாரிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகபொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
போதை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்ய வேண்டாம் என மருந்தாளுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம மேலும் தெரிவித்தார்.