இணையவழி கடன் வழங்குநர்களினால் நாட்டில் பல்வேறு பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘இணையவழி கடன் மாபியாவுக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தபோது எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இணையவழி கடன் வழங்குநர்கள் கடன் பெற்றவர்களிடம் இருந்து நூற்றுக்கு 365 வீதத்திற்கும் அதிகளவான வட்டி வசூலிக்கப்படுவதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள் இன்றி நிதி பரிவர்த்தனை இடம்தபறுவதன் காரணமாக சிலர் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.