டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்?

பொதுவாகவே வாகனத்தை ஓட்டுவதற்கு முதல் எலுமிச்சை வைத்து ஓட ஆரம்பிப்பது வழக்கம். இதை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே பலரும் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு செய்வதனால் நல்லது நடக்குமா? அல்லது தீங்கு ஏற்படுமான என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்?
முந்தைய காலத்தில் மோட்டரால் வேலை செய்யும வாகனத்தை விட மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

கால்நடைகளை இதற்காக பயன்படுத்துவதால் அவற்றின் கால்களில் கல்லோ அல்லது முற்களோ குத்தி காயங்கள் ஏற்பட்டு கிருமி தொற்று அதிகமாகி விடும் என்பதால் எலுமிச்சையை மிதிக்க வைத்து செல்ல வைப்பார்கள்.

எலுமிச்சை என்பது பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இதில் உள்ள அசிட் கிருமிகளை அழித்து காயங்களை குணப்படுத்தக்கூடிய சக்திக் கொண்டதாகும்.

இதற்காகவே வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மாடுகள் மற்றும் குதிரைகளை வாரம் ஒருமுறை எலுமிச்சை பழத்தை மிதிக்க வைத்தார்கள்.

இதனால் கண்ணுக்கு தெரியாத காயங்களும் குணமடையும். இந்த விடயம் மறுவி மறுவி தற்போது வாகனத்தை ஓட்டும் போதும் இதை செய்து வருகிறார்கள். இதை செய்வதால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

Recommended For You

About the Author: webeditor