இலங்கையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கறுப்பு சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு 420 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் கொழும்புவில் 2000 ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
யாழ்பாணத்தில் எல்லா பேக்கரி கடைகளும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்களின் காலை உணவாக பாண் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
ஒரு பாக்கெட் பாண் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக இலங்கை சந்தையில் எதிர் காலத்தில் பாண் (ரொட்டி) ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
50 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.