சேவை காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன்(Micheal Appleton) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலும் இருவருக்கும் இடையில் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கம் மக்களை ஒடுக்கி அதிக வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் விளக்கமளிக்கப்பட்டதோடு,வரி விதிக்காமல் அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.
அரசாங்கம் வேண்டுமென்றே மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கடந்த காலங்களில் இலங்கையில் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.