தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டு சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சட்டங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக உள்நாட்டு மதுபானம் மீதான வரியை குறைப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு தேசிய வரிகள் மறுசீரமைப்பு, மதுபான வரி மறுசீரமைப்பு மற்றும் உள்நாட்டு மதுபானங்களுக்கு வரி விலக்களித்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து விமான நிலையங்களிலும் வரியில்லா கடைகளை இல்லாதொழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரியில்லா கடைகளில் கொள்வனவு செய்வதை விட பணத்தை நாட்டிற்குள்ளேயே அதிகம் செலவு செய்வதனை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 2023 ஆம் நிதியாண்டில் மதுபானங்களுக்கான வரியாக 5.19 மில்லியன் அமெரிக்கடொலர்களை மதுவரித்துறை அறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.