வாகனப் பதிவுக்கு வரி இலக்கம் கட்டாயமாகின்றது

வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கு வருமான வரி இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி பெப்ரவரி முதல் வருமான வரி இலக்கம் இல்லாத வாகனங்கள் பதிவுசெய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான தெரிவித்துள்ளார்.

“ஜனவரி முதலாம் திகதி எமது திணைக்களத்தில் 437,547 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று அந்த எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin