ஈரான் இரட்டை குண்டுவெடிப்பு: இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது

ஈரானில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட இரட்டைக் குணடுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

2020 இல் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மறைந்த தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் நிகழ்வின் போது நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 141 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய அவசர சேவைகள் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அரச ஊடகம் தெரிவித்திருந்தது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களால் சுலைமானியின் கல்லறை சேதமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையிலேயே, தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin