நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஊடாக பெற்றோர் கைது செய்யப்படும் போது, அவர்களது வீடுகள் பாதுகாப்பற்றதாக மாறுவதுடன், சிறுவர்களை பாதாள உலக குழுக்களில் இணைவதற்கும், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு இட்டுச்செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு பகுதியில் பெற்றோர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு எவரும் அற்ற நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ;
கைது செய்யப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பணம் இல்லாததன் காரணமாக வழக்கறிஞர்களை நியமிக்கும் திறன் இன்றி இருக்கின்றனர்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்ததாக எந்தவொரு செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.
பிரதான சந்தேக நபர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை அவதானிக்க முடியவில்லை.
முந்தைய நாட்களில் கடற்கரை பகுதியில் உள்ள ஹோட்டல்களை இயந்திரம் கொண்டு பொலிஸார் அளித்ததனை பார்த்திருந்தோம்.
கடற்கரையில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரமும் கடற்கரைப் பாதுகாப்புத் துறைக்கே உள்ளது. அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெறவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் ஹோட்டல்களை அகற்ற தெரிவு செய்வதற்கும் வேறு சில ஹோட்டல்கள் தமது தொழிலைத் தொடர அனுமதிப்பதற்கும் இடையில் முக்கியமான தொடர்பு இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், யுக்திய சுற்றுவளைப்பு நடவடிக்கையின் முடிவு குறித்து ஆழ்ந்த கேசரிசனை காட்டுமாறு ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.