நாட்டில் ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
சந்தையில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுமார் 200 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கோதுமை மாவை வழங்கும் இரண்டு நிறுவனங்களான Prima மற்றும் Serendib ஆகியவை தற்போது கோதுமை மா தேவையில் 25 சதவீதத்தை சந்தைக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தொடர்புடைய 2 நிறுவனங்கள் தேவையான முழு அளவிலான கோதுமை மாவையும் வழங்க முடியும் என்றும், டாலர் பற்றாக்குறையால், தொடர்புடைய நிறுவனங்கள் தற்போது கோதுமை மா தேவையின் ஒரு பகுதியை மட்டுமே வழங்குவதாகவும் திரு ஜெயவர்தன கூறினார்.
கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் கறுப்புச் சந்தை விலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 13,500 ஆக இருந்த 50 கிலோகிராம் கோதுமை மா, சந்தையில் 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவான தீர்வு வழங்கப்படாவிட்டால் பாண் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.