இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேரடி விமான சேவையை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய எயார்லைன்ஸ் இணைந்துள்ளது.
குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு Boeing – 777 எனும் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கால அட்டவணையின்படி, ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களுக்கு ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் விமான சேவையை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ரஷ்யா இடையில் ஏரோஃப்ளோட் (Aeroflot), அஸூர் ஏர் (Azure Air) மற்றும் ரெட் விங்ஸ் (Red Wings) ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விமான சேவையை முன்னெடுத்து வருகின்றன.