கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (TD Bank) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மைய காலமாக கனடாவில் வீட்டு விலைகள் வெகுவாக உயர்வடைந்து சென்ற நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் வீட்டு விலைகள் குறைவடையும் என அந்த வங்கி எதிர்வுகூறியுள்ளது.
சுமார் 20 முதல் 25 வீதம் வரையில் விலை வீழ்ச்சி அடையும் என அந்த வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.
ரீடி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் வீட்டு விலைகள் ஐந்து வீதத்தினால் குறைவடைந்துள்ளது என கனடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் அசாதாரண அளவில் வீடுகளின் விலைகள் கனடாவில் உயர்வடைந்திருந்தமே குறிப்பிடத்தக்கது.