தென்கொரியாவின் ஜனநாயக எதிர்கட்சி தலைவர் லீ ஜே-மயுங் ஜனவரி இன்று தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
லீயிடம் நினைவுக் கையொப்பம் (ஆட்டோகிராஃப்) கேட்டு அணுகிய தாக்குதல்காரர், முன்னோக்கிச் சென்று லீயின் கழுத்தில் கத்தியால் குத்தினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
50 அல்லது 60 வயது மதிக்கத்தக்க அந்த நபர், உடனே கட்டுப்படுத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
லீ, கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்திருப்பதையும் சுற்றியுள்ளவர்கள் அவரது கழுத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்துவதையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன.
லீ ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து பூசான் நகரத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு கடுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்புலம் தொடர்பில் பூசான் நகர பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்