ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இலங்கைக்கான பயண ஆலோசனையை எளிதாக்கியுள்ளன.
இதனால் இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட முன்னேற்றமடையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இந்த இரு நாடுகளின் அறிவிப்பும் வெளியானது.
ஸ்கண்டிநேவிய நாடுகள்
கடந்த காலங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஸ்கண்டிநேவிய நாடுகளின் பங்கு சிறப்பாக இருந்தது.
எனவே தற்போதைய செய்தி இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.
ஏற்கனவே பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உட்பட்ட பல நாடுகள், இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை தளர்த்தியுள்ளன.