லைபீரியாவில் பெட்ரோல் கொள்கலன் வெடிப்பு: 40 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான லைபீரியாவில் உள்ள டொயோட்டாவில் பெட்ரோல் கொள்கலன் வெடித்து சிதறியதில் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 83 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லைபீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொயோட்டாவில் எண்ணெய் கொள்கலன் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து பெட்ரோல் கசிவதை கண்டு மக்கள் பெட்ரோலை சேகரிக்க சென்றிருந்த போது கொள்கலன் திடீரென வெடி இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர தீ விபத்தில் 40 பேர் பலியாகினர். 83 பேர் படுகாயமடைந்தனர். எண்ணெய் கொள்கலன் கவிழ்ந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவத்திற்கு லைபீரியா ஜனாதிபதி வீஹ் ஆழ்ந்த கவலைய வெளியிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல். சோகத்தின் படங்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin