தொழில் இல்லாதவர்களுக்கு 20 ஏக்கர் காணி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முன்னெடுக்கப்படும் என கூறிய ஜனாதிபதி அதற்கான 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.