இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர், இலங்கையின் உயர் நீதிமன்றம் இந்த விடயத்தில் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், நெருக்கடிக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் சந்தேகம் எழுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டம் நியாயமாக அமுல்படுத்தப்படாவிட்டால் ஒரு நாடு முன்னேற முடியாது என பேராயர் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு செயல்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அரசு அலட்சியம் செய்வது தவறு,” என்றார்.