பதுளை கல்வி வலையத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் பணிபுரிந்து வருகின்ற இரண்டு ஆசிரியர்கள் தகாத முறையில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை வலையகல்வி பணிமனை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த இரண்டு ஆசியர்களும் அதேபாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற சுமார் ஐம்பது மாணவர்களை வைத்து தனியார் வகுப்பு நடாத்தும் பேரில் தகாத முறையில் ஈடுபட்டு வருவதாக கல்வி அமைச்சிக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்தே குறித்த விசாரணையை நடாத்துமாறு இராஜாங்க அமைச்சர் பணிப்புரையை விடுத்துள்ளார்.
மேலும், வெகுவிரைவில் விசாரணைகளை ஆரம்பித்து கல்வி அமைச்சிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு ஆசிரியர்களும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்பதோடு இது ஒரு பாரதுரமான விடயமாக இதனை பார்க்க வேண்டியுள்ளது.
இதேவேளை, இந்த விசாரணைக்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.