உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவுக்கு தணிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
ஆனால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் கச்சா எண்ணெய் சந்தையை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பிபாய் விலை 79.75 டொலராகவும், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பிபாய் விலை 74.06 டொலராகவும் உள்ளது.
நேற்று (27) கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் ஜனவரி மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள விலை திருத்தத்தில் பாரிய அதிகரிப்புகள் எதவும் எரிபொருள் விலைகளில் இடம்பெறாதென அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன