பிரித்தானியாவில் வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 5 வருடங்களில் இவ்வாறானதொரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைச்செலவு நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள சொத்து விலை ஆகியவற்றின் காரணமாக பிரித்தானியா கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 40 வீதம் அதிகரித்துள்ளதாக தொன்று நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கிராமப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 17,212 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 24,143 ஆக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலண்டன், Norwich உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த பிரச்சினை மிகவும் கடுமையாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியா முழுவதும் சராசரியாக 100,000 பேருக்கு 15 பேர் வீடற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, Boston முழுவதும் உலா நகரங்களில் 100,000 பேருக்கு 38 பேர் வீடற்றவர்கள் எனவும், லண்டனில் 100,000 பேருக்கு 23 பேர் வீடற்றவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் திறந்தவெளி, கூடாரங்கள், தற்காலிக தங்குமிடங்கள் அல்லது மனிதர்கள் வசிப்பதற்கு பொருத்தமற்ற கட்டிடங்களில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவின் கிராமப்புறங்களில் 300,000 பேர் வீட்டு வசதிக்காக காத்திருப்பதாக குறித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆண்டுக்கு 300,000 புதிய வீடுகளைக் கட்டும் அரசாங்கத்தின் நோக்கத்தின் அடிப்படையில், குடியிருப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு 50 ஆண்டுகள் ஆகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin