மீன் வடிவில் மண்ணில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

கடற்கரைகளில் உள்ள ஒரு சிறிய வகை மீன் பலருக்கு ஆபத்தாக உள்ளது.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில், கடற்கரைகளுக்கு அடிக்கடி செல்லும் மக்களுக்கு ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிட்யூசன் (RNLI) ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில், பார்ப்பதற்கு ஒரு சிறிய சைஸில் இருக்கும் மீன் ஒன்றில் உள்ள ஆபத்தான தன்மை தான்.

ஆபத்தான மீன்
Weever Fish என அழைக்கப்படும் இந்த ஒரு வகை ஓட்டு மீன்கள், கடல் நீரில் மணலில் எளிதில் கலந்து விடுவதாக கூறப்படுகிறது.

அப்படி மணலில் புதைந்த பின்னர், தங்களின் முதுகு பகுதி மட்டும் தரைக்கு மேலே தெரியும் படி செய்யுமாம்.

அப்படி இருக்கையில், அதன் முதுகு பகுதியில் கொடுக்குகள் போன்ற மூன்று விஷமுள்ள முதுகெலும்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்களை வேட்டையாடுபவர்களிடம் இருந்து இந்த கொடுக்கு மூலம் தங்களை இந்த வீவர் மீன்கள் காத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

மண்ணில் பதுங்கி இருக்கும் அதிர்ச்சி
மேலும், இந்த விஷ பொருள் கொண்ட கொடுக்கு மூலம் தான், மனிதர்கள் மயக்கமடையும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஓட்டு மீன்கள், தற்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் அதிகம் தென்படுவதால், மக்கள் கவனமாக இருக்கவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வீவர் மீன், ஒருவரை குத்தினால், அவர்களுக்கு வலியை ஏற்படுத்தலாம் என்றும், ஆனால் இது பெரிய அளவில் தீங்கு விளைவிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், வலியின் தீவிரம் என்பது, நபருக்கு நபர் அவர்களின் வலி சகிப்புத்தன்மையை பொறுத்து மாறுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒருவரை மீன் கடித்தால், அவர்கள் எடுக்கக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் RNLI சில விஷயங்களை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், இந்த வீவர் மீன்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால், கடல் நீரில் செல்வோர்கள் பூட்ஸ் அல்லது நீச்சல் காலணிகளை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பார்ப்பதற்கு மிகச் சிறிய உருவமாக இந்த வீவர் மீன்கள் தெரிந்தாலும், அவற்றில் உள்ள விஷத் தன்மை ஒருவரை மயக்கமடைக்க வைக்கும் அளவுக்கும் இருக்கும் என்ற தகவல், பலரையும் மிரள வைத்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor