இலங்கையில் பயிரிடப்பட்ட கேரளா கஞ்சா

கேரளா கஞ்சா ரகத்தை இலங்கையில் பயிரிட்டிருந்த ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தணமல்வில பிரதேசத்தில் இப்படியான கஞ்சா செய்கை பிடிப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தெரியவந்துள்ளது.

தணமல்வில கங்கே யாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சோளப் பயிர் செய்கை என்ற போர்வையில் மிக தந்திரமா தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கஞ்சா பயிரிடப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 அடி உயரமான 628 கஞ்சா செடிக8ள பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 52 வயதான நபரே இந்த கஞ்சாவை பயிரிட்டுள்ளார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். தணமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin