2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்களை நடத்த ஐ.தே.க திட்டங்களை வகுத்துள்ளது.
கட்சியின் உயர்பீடக் குழுவுக்கான உறுப்பினர்கள் மற்றும் குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த மாதம் ஆரம்பத்தில் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் வாக்களிப்பு முகவர் நிலையத்துக்கு பொறுப்பானவர்களை நியமிக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆறு பிரதிநிதிகளை நியமிக்கவும் ஐ.தே.க திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் விசேட அதிகாரமிக்க குழுவொன்றையும் ஐ.தே.க நியமிக்க உள்ளது. இதனை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.