வெளிநாடுகள் இருந்தவாறு இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தி வரும் 30 பேரை கைது செய்து, நாட்டுக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
துபாய் நாட்டில் இருக்கும் 29 பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரான்ஸில் உள்ள ஒருவர் சம்பந்தமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த குற்றவாளிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
இந்த வேலைத்திட்டத்திற்கு எவர் தடையேற்படுத்தினாலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டிற்கு பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் விற்பனை முற்றாக நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.