2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வத்திகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்தினம் நடத்தப்படும் வருடாந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் தனது உரையில் காஸாவையும் இஸ்ரேலையும் குறிப்பிடவில்லை. எனினும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் தீவிரம் பெற்று வரும் நிலையிலேயே போப் பிரான்சிஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பலத்தைக் காட்டுவது மூலம் நீதி கிடைத்துவிடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பாலஸ்தீன நகரான பெத்லஹமில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்துசெய்யப்பட்டுள்ளன.
அங்குள்ள மாங்கர் சதுக்கத்தில் பாரம்பரியமாக வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்துக்குப் பதில் கம்பிகளும் இடிபாடுகளைப் பிரதிபலிக்கும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.