தங்கம் கடத்திய இந்திய பெண் அபராதத்தை உடனடியாக செலுத்தியுள்ளார்

12 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்த இந்திய பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு விதிக்கப்பட்ட 11 கோடியே 80 லட்சம் ரூபா அபராதத்தையும் உடனடியாக செலுத்தியதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சிரேஷ்ட சுங்க பிரதிப்பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இந்த இந்திய பெண் நேற்று அதிகாலை துபாய் நாட்டில் இருந்து 5.5 கிலோ கிராம் தங்க ஆபரணங்களை தனது உடல் மற்றும் கைப்பையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.

இது தொடர்பான சுங்க விசாரணைகள் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிரேஷ்ட சுங்க பிரதிப்பணிப்பாளர் கமல் பெர்னாண்டோ நடத்தியதுடன் கடத்தி வரப்பட்ட தங்க ஆபரணங்கள் அரசுடமையாக்கப்பட்டது.

இதனையடுத்து 11 கோடியே 80 லட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் இந்திய பெண் கடத்தி வந்த தங்கத்தின் பெறுமதி மற்றும் அபராத தொகையுடன் சேர்த்து சுமார் 24 கோடி ரூபா சுங்க திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.

Recommended For You

About the Author: admin