வங்கியில் பணம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.

இலங்கையில் உள்ள வங்கிகளில் நிலையான வைப்பு அல்லது சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்தம் வட்டி வழங்கப்படுவது வழமை. இந்த வட்டிக்கும் பொருட்கள் சேவைகள் VAT TAX வரி 18 வீதம் விதிக்கப்பட உள்ளது

உதாரணமாக மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வட்டி கிடைத்தால் 1800ரூபாவை VAT TAX வற் வரியாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

பெரும்பாலான ஓய்வூதியகாரர்கள் வங்கிகளில் நிலையான வைப்பை செய்து அதில் வரும் வட்டிக்காசிலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்த எனது நண்பர் ஒருவர் தனது ஓய்வுகாலப்பணம் ஒரு கோடி ரூபாவை இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் நிலையான வைப்பிலிட்டு ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாவை மாதம் வட்டிப்பணத்தை எடுத்து இலங்கையில் வசித்து வருகிறார்.

அவர் இனிமேல் மாதம் 27ஆயிரம் ரூபாவை வற் வரியாக இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

Recommended For You

About the Author: admin