ஹெராயினை விட 300 மடங்கு வலிமையான செயற்கை போதைப் பொருள்

லண்டன் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் செயற்கை போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் போதைப்பொருளால் அழிக்கப்பட்ட சான் ஃபிரான்சிகோவாக, லண்டன் மாறும் அபாயம் இருப்பதாகவும் பிரித்தனாயி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

கலிபோர்னியா மற்றும் பல அமெரிக்க நகரங்களில் ஓபியாய்டு நெருக்கடியால் பீடிக்கப்பட்டதைப் போல, போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் தொற்றுநோய் விரைவில் பிரித்தானியாவை தாக்கும்.

இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பொலிஸ் மற்றும் குற்றவியல் ஆணையர்களின் சங்கத்தின் தலைவர் டோனா ஜோன்ஸ் எச்சரித்துள்ளார்.

லண்டன் மற்றும் பிற பிரித்தானிய நகரங்கள் ஹெராயின் பற்றாக்குறையால் இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொள்வது “தவிர்க்க முடியாதது” என்று ஜோன்ஸ் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியின் பின்னணியில் சீன கும்பல் இருக்கின்றது. ஹெராயினை விட 300 மடங்கு வலிமையான செயற்கை ஓபியாய்டுகளை சீன கும்பல் வழங்குவதாக அவர குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, அடுத்த 12 மாதங்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சீன செயற்கை ஓபியாய்டு சந்தை விரிவாக்க செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கும்பல் உலகம் முழுவதும் ஹெராயின்விநியோகத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன, மேலும் செயற்கை ஓபியாய்டுகளை கொண்டுவருவதற்கான வாய்ப்பைத் தெளிவாகக் கண்டுள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin