பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் புகழ் மற்றும் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது.
YouGov நடத்திய கருத்தாய்வில் பதிலளித்தவர்களில் 70 சதவீதம் பேர் (பத்தில் ஏழு பேர்) அவரைப் பற்றி தங்களுக்கு சாதகமற்ற கருத்து இருப்பதாகக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் 21 சதவீதம் பேர் மட்டுமே ரிஷி சுனகுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதோடு தான் சார்ந்துள்ள கன்சர்வேடிவ் கட்சி வாக்காளர்களிடையேவும் ரிஷி சுனக்கின் புகழ் குறைந்துள்ளது.
அதன்படி 56 சதவீதம் பேர் தாங்கள் பிரதமரை எதிர்மறையாகப் பார்க்கிறார்கள், 40 சதவீதம் பேர் நேர்மறையான பார்வையுடன் ஒப்பிடுகிறார்கள்.
சுனக் தனது சர்ச்சைக்குரிய ருவாண்டா கொள்கை மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றிய பிறகு இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது