வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ள என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் எச்சரிக்கை

இதற்கமைய சட்டரீதியான வங்கி செயற்பாடுகளுக்கு புறம்பாக முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணய பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் ஊடாக வௌ;வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதன் காரணமாக முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை பெறவோ, செலுத்தவோ வேண்டாம் என காவல்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை விரிவுப்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor