தபால் தொழிற்சங்க போராட்டத்தால் அவதியுறும் மக்கள்!

யாழ்ப்பாணம்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

குறித்த போராட்டம் தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (12.10.2023) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைநிறுத்தப் போராட்டம்
27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 653 தபால் நிலையங்கள், 3,410 உப தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து நிர்வாக அலுவலகங்களும் முடங்கும் என்றும், சுமார் 27,000 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சேவைகளைப் பெறுவதற்காக வட்டுக்கோட்டை தபால் நிலையத்துக்கு வருகை தந்த மக்கள், தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை பார்த்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதான தபாலகம் இன்றைய தினம் (11.12.2023) மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

இதன்காரணமாக பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் தபாலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.

இன்றும் நாளையும் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையினை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor