நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தறை மற்றும் குருநாகல் என 9 மாவட்டங்களுககு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், பதுளை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென்ஜோன்டிலரி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.