கனடாவில் எதிர்வரும் 2024ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் ஆய்வு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள் அடுத்த ஆண்டில் உணவுப்பொருட்களின் விலை குறையவடைய வேண்டுமென கோரி வருகின்றனர்.
எனினும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறையாது என தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப் பொருள் விலைகள் எதிர்வரும் ஆண்டிலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனினும், பணவீக்கம் குறைவடையும் நிலையில் தற்போதைய விலைகளை விடவும் விலைகள் குறையும் சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் 2.5 வீதம் முதல் 4.5 வீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இறைச்சி, மறக்கரி மற்றும் பேக்கரி உற்பத்திகள், என்பனவற்றின் விலைகள் அதிகளவில் உயர்வடையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் தற்போதைய உணவுச் செலவுகள் சராசரியாக 700 டொலர்களினால் உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.