கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நாளைய தினம் பாரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
அரசாங்க ஊழியர்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கியூபெக் மாகாண பொதுத்துறை ஊழியர்கள் ஒன்றியத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை நீடித்து வருகின்றது.
மாகாண அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு வீதத்தை பொதுத்துறை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன.
16.7வீத அளவில் சம்பள அதிகரிப்பை ஐந்தாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும் என மாகாண அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் இந்த யோசனைக்கு பொதுத்துறை ஊழியர்கள் ஆதரவினை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 420,000 பணியாளர்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்க அளவிற்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுத்துறை சார் ஊழியர்கள் அரசாங்கத்திடம் கோரி வருகின்றனர்.
தமது கோரிக்கையை ஏற்கப்படாத பட்சத்தில் போராட்டத்தில் குதிக்க நேரிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.