கனடாவின் ஒட்டாவா நகரில் வரலாறு காணா அளவிற்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் பதிவான அதி கூடிய மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒட்டாவாவில் அதிக மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தற்பொழுது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ச்சியாக பனிப்பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக 1959 ஆம் ஆண்டு 58 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒட்டவாவில் பணிப்பொழிவு ஏற்பட்டிருந்தது.
அதிக நேரம் பனிப்பொழிவு ஏற்பட்டாலும் பனிப்பொழிவின் செறிவு குறைவாக காணப்பட்டதாகவும் சுமார் 15 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும் கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.