“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பகுதியிலிருந்து கரையைக் கடந்துள்ளதாகவும், அதன் தாழ அமுக்கம் படிப்படியாக வலுவிழந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யும்.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் 2.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையும் தற்காலிக பலத்த காற்றும், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.