மட்டக்களப்பு – கழுவன்கேனி பலாச்சுளை பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வி விசேட தேவையுடைய விதுர்ஷா இன்று அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய ஒருவராகவும் சமூகத்தின் எடுத்துக்காட்டாகவும் மாறியுள்ளார்.
நடப்பது கடினம், வயதுக்கு ஏற்ற வளர்ச்சியில்லை, நெஞ்சில் பெரிய கட்டி, மாதாந்தம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை, இத்தனை சோதனைகள் இருந்தும் சளைக்காமல் போராடிய விதுர்ஷா வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுப்பேற்றை பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளார்.
வந்தார் முலை மகாவிஷ்ணு பாடசாலையில் கல்வி பயிலும் விதுர்ஷாவின் இந்த வெற்றிக்கு தங்கையின் உறுதுணையே பிரதான காரணமாகும் .
அக்காவையும் தங்கையையும் ஒரே தடவையில் உயர்தரம் கற்பிக்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை என்பதே இந்த குடும்பத்தின் ஒரே கவலையாகும்.
விதுர்ஷா கூறுகையில்
“என்னை போல யாரும் இருந்தால் வீட்ட்டிலேயே முடக்கி வைக்காதீர்கள்” “எனக்கு தற்போது 19 வயது .இரண்டு வருடம் பிந்தி படிக்கின்றேன்.
தற்போது O/L பரீட்சையில் சித்தியடைந்துள்ளேன். 2a,2b ,2c 3s பெறுபேறு பெற்றுள்ளேன் .
எனது சகோதரியின் உதவியுடன் படித்து வந்துள்ளேன்.கடவுளின் புண்ணியத்தால் உயர்தரம் படிப்பதற்கு தயாராகி கொண்டு இருக்கின்றேன், எனது தங்கை இல்லை என்றால் என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.
அவள் தான் புத்தகப்பை எல்லாம் எடுத்து கொண்டு படிகளில் ஏற்றி விடுவாள்.
இரண்டு பேரும் ஒரே வகுப்பில் படித்துள்ளோம். நல்ல பெறுப்பேற்றை பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளோம்.” என்றுத் தெரிவித்துள்ளார்.