நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கையொப்பம்
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஞ்சனின் விடுதலைக்கான ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.