அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25.11.2023) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.