கனடாவில் பெண் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு!

கனடாவில் பெண் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவுரா ப்ரீடம் என்ற பெண்கள் உரிமை அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மாரிஸ்ஸ கொக்கோரொஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கனடாவில் பெண்கள் படுகொலை செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமியர் அதிகளவில் பால்நிலை அடிப்படையில் கொலையுறுவதாக தெரிவிக்கப்படுகுpன்றது.

பெண்கள் படுகொலை செய்யப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த நிலைமை தேசிய அவசர நிலைமையாக அறிவிக்கப்பட வேண்டுமென கொக்கோரொஸ் கோரியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருந்தொற்றாக மாறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடனாவில் இரண்டு நாளுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் படுகொலைச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor