ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் நெருங்கி வரும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிப்பதாவது,“பணியாளர் மட்ட கலந்துரையாடலுக்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது தவறான முன்னுதாரணமாக அமையும்.
அரசியல் ஸ்திரத்தன்மை
அவர்களின் ஆதரவு தற்போது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு மிகவும் அவசியமான நிபந்தனைகளில் ஒன்று அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.
அந்த வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்துவதற்கான சூழல் ஏற்படாது.” என வலியுறுத்தியுள்ளார்.