மட்டக்களப்பு தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர் அவர்கள் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவருக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. தேரரின் இந்த கருத்தை முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் வெட்கக்கேடாக நோக்குகிறது. இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor