அவரைக்காயின் நற்குணங்கள்

சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் அவரைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான சத்துகளை வழங்குகிறது.

அவரைக்காயில் விட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துகள் அடங்கியுள்ளன.

நார்ச்சத்துக்கள் அவரைக்காயில் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

அவரைக்காயில் உள்ள கல்சியம் சத்து உடலில் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

அவரைக்காயில் எல்-டோப்பா என்ற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இது அளிக்கும் சுவையானது மன அழுத்தத்தை போக்குகிறது.

அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கல், வயிற்று பொருமல் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் தரும்.

அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும்.

முற்றிய அவரைக்காயை உணவில் சேர்க்க கூடாது. அதற்கு பதிலாக சூப் செய்து குடிக்கலாம்.

Recommended For You

About the Author: webeditor