உலக கிண்ண ரக்பி போட்டி தொடரில் தென் ஆபிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
உலக கிண்ண ரக்பி போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
புள்ளி விபரம்
போட்டியின் முதல் பாதியின் போது தென் ஆபிரிக்கா 11 புள்ளிகளையும் நியூசிலாந்து 6 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டிருந்தன.
பின்னர் அபாரமாக விளையாடிய நியூசிலாந்து மேலும் ஐந்து புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. இதனிடையே தென் ஆபிரிக்க அணி மேலும் ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டது.
இதன்படி போட்டியின் இறுதியில் தென் ஆபிரிக்க அணி 12 புள்ளிகளையும் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன.
இதன்படி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டியின்போது நியூசிலாந்து அணியின் தலைவர் சேம் கேனுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
உலக கிண்ண ரக்பி இறுதிப் போட்டியொன்றில் இவ்வாறான சம்பவம் பதிவான முதல் தடவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தடவையும் தென் ஆபிரிக்க அணியே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது