மீன் வகைகளின் விலைகள் மேலும் உயர்வடைந்துள்ளதாக பெஹலியகொட மீன் சந்தை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட தொகைகளுக்கும் கூட மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படாத காரணத்தினால் மீனவர்களினால் கடற்றொழிலில் ஈடுபட முடியவில்லை.
மீன் கையிருப்பு வீழ்ச்சி
இதனால் மீன் கையிருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மீன்களின் மொத்த விற்பனை விலை 100 முதல் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
போதியளவு மீன்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை
இந்த பருவ காலத்தில் கூடுதல் அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற போதிலும், எரிபொருள் பிரச்சினையால் மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.