2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது.
சென்னையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுகொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ஓட்டங்களையும், அப்துல்லா ஷபீக் 58 ஓட்டங்களை பெற்று கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் நூர் அகமது 3 விக்கெட்டுக்களையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுக்களை முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய் தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதன்படி 283 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை எட்டியது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, ஆட்டமிழக்காமல் ரஹ்மத் ஷா 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறான நிலையில் முதன்முறையாக பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளது.