ஜ .நா. வில் கதறி அழுத பாலஸ்தீன பிரதிநிதி

ஐ.நா.வின் 3 வது குழுவான சமூக, மனிதநேய, கலாசாரக் கூட்டத்தில், காசாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையைப் பற்றிப் பேசிய பாலஸ்தீன பிரதிநிதி சஹர் கே. ஹெச். சாலெம், கண்ணீர் விட்டு அழுதுள்ள காணொளி தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

காசாவில் பாரபட்சமின்றி, பெண்கள், குழந்தைகள் ஆகியோர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில மணித்தியாலங்களில் காசாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இச்சம்பவம் தொடர்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த மருத்துவமனைகளில் காசாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்- ஷிஃபா, அல்- குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலஸ்தீனய ஊடகங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹமாஸ் தனது டெலிகிராம் சனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களும் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor